ஆஸிட் வீச்சு
ஆஸிட் வீச்சுகூகுள்

பீகார்: வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் ஆத்திரம்.. இளைஞர் மீது ஆஸிட்டை ஊற்றிய பெண்!

பீகாரில் தன்னுடன் பழகி வந்த இளைஞர் வேறொரு பெண்ணை திருமணம் செய்ததால் ஆத்திரமடைந்த பெண் அவர் மீது ஆஸிட்டை ஊற்றிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

திருமணம் செய்ய மறுத்த இளைஞர் மீது ஆஸிட்டை ஊற்றிய பெண்!

பீகார் மாநிலம் வைஷாலி பகுதியைச் சேர்ந்தவர் சரிதா குமாரி. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்த நிலையில் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இவரின் வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் தர்மேந்திர குமார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார்.

சரிதா குமாரியும் தர்மேந்திர குமாரும் கடந்த ஐந்து மாதங்களாக காதலித்து வந்துள்ளனர், இவர்களின் காதலுக்கு தர்மேந்திர குமார் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு வேறு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதனால், கோபமடைந்த சரிதா குமாரி, இரு தினங்களுக்கு முன் தர்மேந்திர குமாரை தனது வீட்டிற்கு அழைத்திருக்கிறார்.

சரிதா குமாரி அழைத்ததின் பெயரில் தர்மேந்திர குமாரும் அங்கு சென்றிருக்கிறார். அங்கு சரிதா குமாரி வீட்டில் வேறு ஒரு இளைஞரும் இருந்துள்ளார். இதில் சரிதாகுமாரிக்கும் தர்மேந்திர குமாருக்கும் பரஸ்பரம் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் சரிதா குமாரி வீட்டில் இருக்கும் இளைஞரின் உதவியுடன், தான் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள ஆஸிட்டை தர்மேந்திர குமாரின் முகத்தில் வீசியுள்ளார்.

இதில் கண் மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த தர்மேந்திர குமாரை அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரது அளித்த புகாரின்பேரில் சரிதா குமாரியையும் அவருக்கு உதவி செய்த இளைஞரையும் கைது செய்த போலிசார், அவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com