ராகுலுக்கு எதிராக கட்சி தலைவர்களே சதி செய்தனர் - பீகார் காங். தலைவர்

ராகுலுக்கு எதிராக கட்சி தலைவர்களே சதி செய்தனர் - பீகார் காங். தலைவர்
ராகுலுக்கு எதிராக கட்சி தலைவர்களே சதி செய்தனர் - பீகார் காங். தலைவர்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் கட்சி தலைவர்களே சதி செய்ததாக பீகார் காங்கிரஸ் தலைவர் கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் எதிர்க்கட்சி அந்தஸ்து கூட கிடைக்கவில்லை. இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகிறார்கள். 

ராகுல் காந்தியும் தன்னுடைய தலைவர் பதவியை ராஜினாமா செய்வதில் உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தோல்விக்கான காரணங்களை காங்கிரஸ் கட்சி ஆய்வு செய்து வருகிறது. மே 25ம் தேதி நடைபெற்ற காரிய கமிட்டி கூட்டத்திலும் தோல்வி குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றதாக தகவல் வெளியானது. 

இந்நிலையில், ராகுல் காந்திக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் கட்சி தலைவர்களே சதி செய்ததாக பீகார் காங்கிரஸ் தலைவர் ஷியாம் சுந்தர் சிங் திராஜ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “மக்களவைத் தேர்தலுக்கான சீட் ஏலத்தில் அடிப்படையிலே விற்பக்கப்பட்டது. யாரையும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க அனுமதிக்கவில்லை. மத்திய தலைமையின் உத்தரவுகள் உள்நோக்கத்துடன் மறைக்கப்பட்டன. கூட்டணி கட்சியில் உள்ளவர்களும் காங்கிரஸ் சதியில் ஈடுபட்டனர். ராகுல் காந்தி தலைவராக இல்லாவிட்டால், ஒட்டுமொத்த எதிர்க்கட்சியும் அழிந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com