\
‘பிகில்’- பதிப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி

‘பிகில்’- பதிப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி

‘பிகில்’- பதிப்புரிமை வழக்கு தொடர நீதிமன்றம் அனுமதி
Published on

‘பிகில்’ திரைப்படக் கதைக்கு பதிப்புரிமை கோரி வழக்கு தொடர இயக்குநர் செல்வா என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

‘பிகில்’ திரைப்படத்தின் கதை தன்னுடையது எனக்கூறி, உதவி இயக்குநர் கே.பி செல்வா என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அப்படத்திற்கு தடை விதிக்கவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதாவது ‘பிகில்’ திரைப்படக் கதைக்கு பதிப்புரிமை கோரி வழக்கு தொடர இயக்குநர் செல்வா என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது

கே.பி.செல்வா வழக்கு தொடர்ந்து அது விசாரணைக்கு ஏற்கப்பட்டால் ‘பிகில்’ படத்திற்கு சிக்கல் ஏற்படும். அதேசமயம் ‘பிகில்’ வெளியீடு தொடர்பாக உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com