தமிழ் மாநில காங்கிரசுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு

தமிழ் மாநில காங்கிரசுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு
தமிழ் மாநில காங்கிரசுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு

மக்களவைத் தேர்தலில் தஞ்சையில் போட்டியிடும் ஜி.கே.வாசனின் தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

மக்களவைத் தேர்தலையொட்டி அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம்பிடித்துள்ளது. தமாகாவுக்கு தஞ்சை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 2019 மக்களவைத் தேர்தலில், என்.ஆர்.நடராஜன் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடுவார் என ஜி.கே.வாசன் இன்று அறிவித்துள்ளார். மேலும் தனி சின்னத்தில் தமாகா போட்டியிடும் என்றும் தெரிவித்தார்.

இந்நிலையில், தமாகாவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் ஏற்கனவே சைக்கிள் சின்னத்தில்தான் போட்டியிட்டு வந்தது. இருப்பினும், கடந்த சட்டசபை தேர்தலில் அதற்கு தென்னந்தோப்பு சின்னம் கிடைத்திருந்தது. இந்நிலையில், தமாகாவுக்கு மீண்டும் சைக்கிள் சின்னம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு இன்னும் தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. விழுப்புரத்தில் அக்கட்சி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டாலும், சிதம்பரத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறார். தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்குவதை தாமப்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.  அதேபோல், டிடிவி.தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு சின்னம் ஒதுக்கீடு செய்வதில் இன்னும் இழுபறி நிலவி வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com