யாசகம் பெற்ற பணத்தை 3வது முறை கொரோனா நிதிக்குக் கொடுத்த கொடை வள்ளல்!

யாசகம் பெற்ற பணத்தை 3வது முறை கொரோனா நிதிக்குக் கொடுத்த கொடை வள்ளல்!

யாசகம் பெற்ற பணத்தை 3வது முறை கொரோனா நிதிக்குக் கொடுத்த கொடை வள்ளல்!
Published on

மதுரையில் யாசகம் பெற்ற பணத்தை ஒருவர் மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்.

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்பவர், பல்வேறு பகுதிகளுக்குச் சென்று யாசகம் பெற்று அந்தப்பணத்தை, பள்ளிகள் மற்றும் ஆதரவற்றோர் இல்லங்களுக்குக் கொடுத்து உதவி வருகிறார். அந்த வகையில் மதுரையில் யாசகம் செய்து தான் பெற்ற பணத்தை இரண்டு முறை கொரோனா வைரஸ் நிவாரண நிதிக்குக் கொடுத்து உதவினார்.

இந்நிலையில், தான் யாசகம் பெற்ற பணத்தை மூன்றாவது முறையாக கொரோனா நிவாரண நிதிக்காக மதுரை மாவட்ட ஆட்சியர் வினய்யிடம் பாண்டியன் வழங்கினார். இதுவரை அவர் 30 ஆயிரம் ரூபாயை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com