\
இந்தி பாட்டுக்கு சாயிஷாவின் செம டான்ஸ் - வைரலாகும் வீடியோ

இந்தி பாட்டுக்கு சாயிஷாவின் செம டான்ஸ் - வைரலாகும் வீடியோ

இந்தி பாட்டுக்கு சாயிஷாவின் செம டான்ஸ் - வைரலாகும் வீடியோ
Published on
ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘வனமகன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா. கஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்தபோது, நடிகர் ஆர்யாவுடன் காதல் மலர்ந்த நிலையில், இருவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தற்போது ஆர்யாவுடன் டெடி என்ற படத்தில் நடித்துள்ளார்.
சாயிஷா நடனத்தில் அதிக ஆர்வம் உடையவர். பல நடன அசைவுகளை மிக அழகாக வெளிப்படுத்தக்கூடியவர்.  இந்நிலையில் கொரோனா பரவலால் வீட்டில் முடங்கியிருக்கும் நடிகை சாயிஷா அவ்வப்போது தனது புகைப்படங்கள், நடனமாடும் மற்றும் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
 
இந்நிலையில் இந்தி பாடல் ஒன்றுக்கு நடனமாடும் வீடியோவை சாயிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
 
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com