"சுய உதவிக்குழு பெண்களை மிரட்டுகிறார் வங்கி மேலாளர்" சீர்காழி வட்டாட்சியரிடம் புகார்

"சுய உதவிக்குழு பெண்களை மிரட்டுகிறார் வங்கி மேலாளர்" சீர்காழி வட்டாட்சியரிடம் புகார்
"சுய உதவிக்குழு பெண்களை மிரட்டுகிறார் வங்கி மேலாளர்" சீர்காழி வட்டாட்சியரிடம் புகார்

சீர்காழியில் தனியார் வங்கி மேலாளர், மற்றம் ஊழியர்கள் தவணை தொகையை கேட்டு வீட்டில் உள்ள பொருட்களை அள்ளி சென்று விடுவோம் என மிரட்டுவதாகவும் மகளிர் குழு பெண்கள் வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் 500க்கும் மேற்பட்ட மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் கடன் பெற்று அந்த தொகையை கொண்டு பல்வேறு தொழில் செய்து வருகின்றனர். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு வங்கிகளுக்கு மாதம் மாதம் கடன் தொகையை வட்டியுடன் செலுத்தி வருகின்றனர்.

 இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த சில மாதங்களாக வங்கிகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நடத்தி வரும் வங்கிகளில் கடன் பெற்ற மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் தாங்கள் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றனர்.

மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த பெண்கள் வாங்கிய கடன்களை செலுத்த மத்திய மாநில அரசுகள் மற்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் அவகாசம் வழங்கி கடன் தொகையை செலுத்த வலியுறுத்தக் கூடாது எனவும் அறிவித்துள்ளது. ஆனால் இந்த உத்தரவுகளை மீறி தனியார் வங்கிகள் மற்றம் தொண்டு நிறுவனங்கள் நடத்திவரும் வங்கிகளின் மேலாளர்கள் ஊழியர்கள், கடன் பெற்ற மகளிர் குழுவை சேர்ந்த பெண்களை மிரட்டி பணம் வசூலித்து வருகின்றனர்.

இந்நிலையில், சீர்காழி கோவிலான் தெருவில் வசிக்கும் மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் பல்வேறு தனியார் வங்கிகள், தொண்டு நிறுவனம் நடத்தி வரும் வங்கிகள் மூலம் கடன் பெற்றுள்ளனர். இந்த கடன் தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் என மேலாளர் மற்றும் ஊழியர்கள் கூட்டமாக வந்து கடனை உடனடியாக கட்டவில்லை என்றால் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்து சென்று விடுவோம் என மிரட்டுவதாக பாதிக்கபட்ட பெண்கள் கடனை அடைக்க தங்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்று சீர்காழி வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com