”இந்த டிராஃபிக்லதான் என் காதல் வாழ்க்கை தொடங்கிச்சு..” - பெங்களூரு வாசியின் சுவாரஸ்ய கதை!

”இந்த டிராஃபிக்லதான் என் காதல் வாழ்க்கை தொடங்கிச்சு..” - பெங்களூரு வாசியின் சுவாரஸ்ய கதை!
”இந்த டிராஃபிக்லதான் என் காதல் வாழ்க்கை தொடங்கிச்சு..” - பெங்களூரு வாசியின் சுவாரஸ்ய கதை!

பெங்களூரு என சொன்னாலே ஐ.டி. பார்க், டிராஃபிக், ஜில் க்ளைமேட் தான் அனைவரது நினைவுக்கும் வரும். அதுவும் பெங்களூருவின் போக்குவரத்து நெரிசல் குறித்த பதிவுகள் பலவும் அண்மைக்காலமாக தொடர்ந்து வட்டமடித்து வருகிறது. ஆனால் இந்த டிராஃபிக் எல்லாருக்குமே பெரும் பிரச்னையாக இருந்திருக்காக. குறிப்பாக இப்போது நாம் பார்க்கப் போகும் நபருக்கு அந்த டிராஃபிக் வரமாகவே இருந்திருக்கிறது.

டிராஃபிக்கால் என்ன பெரிய நல்லது நடந்துவிடப் போகிறது. எரிச்சலும் கடுப்பும்தான் எவருக்குமே வரும் என தோன்றவைக்கும். ஆனால் பெங்களூரு டிராஃபிக் சிக்னலில் தொடர்ந்து ஒலிக்கும் வாகனங்களில் ஹார்ன் சத்தங்களுக்கு இடையே அழகான ஒரு காதல் கவிநயமாக பூத்திருக்கிறது. அது தொடர்பான ரெடிட் பதிவுதான் தற்போது ட்விட்டரில் பகிரப்பட்டு பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.

வைரலான பதிவில் அந்த நபர் பெங்களூரு டிராஃபிக் மலர்ந்த தன்னுடைய காதல் கதை குறித்து குறிப்பிட்டிருக்கிறார். அதில், அந்த நபர் தன்னுடைய மனைவியை சோனி வேர்ல்ட் சிக்னலில்தான் முதல் முதலாக சந்தித்திருக்கிறார். முதலில் நட்பாக மட்டுமே பழகி வந்ததால் சிக்னலில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க அவரை அடிக்கடி தன் பைக்கில் ஏற்றி ட்ராப் செய்வதை பழக்கமாக கொண்டிருந்திருக்கிறார்.

இப்படியாக தொடர, ஒருநாள் அந்த பெண்ணை கொண்டு விட செல்ல முயன்ற போது எஜிபுரா மேம்பால பணி நடக்கும் இடத்தில் டிராஃபிக் நெரிசல் ஏற்பட்டதால் அங்கு வெகு நேரமாக காத்திருக்க வேண்டி இருந்தது. ஆகையால் அன்றைய நாள் வேறு வழியில் செல்ல முயன்ற அந்த ஜோடி அதீத பசியில் இருந்ததால் டின்னர் சாப்பிட சென்றிருக்கிறார்கள்.

அன்றில் இருந்து இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்திருக்கிறார்கள். அதன் பிறகு மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்த இருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணமும் செய்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் வெறும் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவு கொண்ட எஜிபுரா மேம்பால பணி மட்டும் இதுகாறும் முடிந்தபாடில்லை” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இந்த பதிவை பகிர்ந்த ட்விட்டர் பயனர் ஒருவர், பீக் பெங்களூரு மொமண்ட் எனக் குறிப்பிட்டு ரெடிட் தளத்தில் இதுதான் இன்றைக்கு ஹாட் டாபிக் என கேப்ஷன் இட்டுள்ளார். இதனைக் கண்ட நெட்டிசன்கள் பலரும் எஜிபுரா மேம்பாலம் குறித்து ட்வீட் செய்து வருகிறார்கள்.

அதில் ஒரு பயனர், “பெங்களூருவில் ஒரு நிறுவனத்தில் ஒரு வருஷம் இண்டெர்ன்ஷிப் முடித்துவிட்டு அதே நிறுவனத்தில் 2 வருஷம் வேலை செய்துமுடித்து பெங்களூருவை விட்டே வெளியூறுக்கு சென்றுவிட்டேன். அப்போதும் அந்த எஜிபுரா மேம்பாலம் பணி இன்னும் முடிந்தபாடில்லை” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com