\
”ஃபேஷனா இருந்தாலும் நியாயம் வேணாமா?” - ஷூ லேஸில் தோடு.. மலைக்க வைக்கும் விலை!

”ஃபேஷனா இருந்தாலும் நியாயம் வேணாமா?” - ஷூ லேஸில் தோடு.. மலைக்க வைக்கும் விலை!

”ஃபேஷனா இருந்தாலும் நியாயம் வேணாமா?” - ஷூ லேஸில் தோடு.. மலைக்க வைக்கும் விலை!
Published on

ஃபேஷன் உலகில் எதுவுமே ஆடம்பரமாகத்தான் இருக்கும். குப்பையில் தொடங்கி மெத்தை வரை ஆடம்பரங்கள் நீக்கமற நிறைந்திருக்கின்றன. அதன்படி, நாம் சாதாரணமாகத்தான் இருக்கிறது என எண்ணும் ஒவ்வொரு பொருளும் உலகின் மிக விலையுயர்ந்த பொருட்கள் என்ற பட்டியலில் அடங்கி விடுகிறது.

அவற்றை தயாரித்து சந்தையில் விற்பதற்கென்ற உலகில் பல நிறுவனங்கள் செயல்பாட்டில் இருந்து வருகின்றன. அந்த வகையில் காதில் அணியக்கூடிய தோடு ரகம் ஒன்று உலகின் விலை உயர்ந்த பொருட்களில் அங்கமாக இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா?

ஒருவேளை தங்கம், வைரம் போன்ற விலைமதிக்கத்தக்கதாக இருக்கும் என நினைக்கலாம். அதான் இல்லை. வெறும் ஷூ லேஸின் மீளுருவாக்கம் செய்யப்பட்ட தோடு குறித்துதான் பார்க்கப் போகிறோம்.

View this post on Instagram

A post shared by HIGHSNOBIETY (@highsnobiety)

உலகின் பிரபலமான ப்ரீமியம் பிராண்ட்களில் ஒன்று Balenciaga. அந்த பிராண்ட் நிறுவனம்தான் தற்போது புதுமையான earring-ஐ சந்தைப்படுத்தியுள்ளது. அதாவது ஷூவில் கட்டப்படும் லேஸை அப்படியே காதில் அணியும் வகையில் அதில் Balenciaga-ன் லோகோவுடனான வளைவுகள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் விலை எவ்வளவு தெரியுமா? வெறும் 261 டாலர் என விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 20 ஆயிரத்து 847 ரூபாயாம். இது இரண்டு நிறங்களை கொண்ட வெரைட்டிகளிலும் கிடைக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பான ஃபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து நெட்டிசன்கள் பலரும் வியப்படைந்ததோடு, டாப் பிராண்ட் என்பதற்காக இப்படியெல்லாமா பொருட்களை விற்பது எனவும், இதுப்போன்ற முட்டாள்தனமாக யோசித்து காசு பார்ப்பதை நிறுத்துங்கள் எனவும் Balenciaga-ஐ சாடியிருக்கிறார்கள்.

முன்னதாக இதே நிறுவனம்தான் குப்பைகளை போட்டு வைக்கும் டிராஷ் பேக்கை 1790 டாலருக்கு அறிமுகம் செய்திருந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com