பக்ரீத் பண்டிகை: முதல்வர், ஆளுநர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
ஆளுநர் வித்யாசாகர்ராவ், முதலமைச்சர் பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் பக்ரீத் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தியாகத்தை குறிக்கும் நன்னாளில் வேற்றுமைகளையும் கோபங்களையும் புறக்கணிக்க வேண்டும் என்றும் கருணையின் மீதான நம்பிக்கையையும் கடமைகளையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றும் ஆளுநர் தன் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாம் போதிக்கும் அன்பு, கருணை, இரக்கம், பணிவு ஆகிய குணங்களை கடைபிடித்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என முதலமைச்சர் தன் வாழ்த்தில் தெரிவித்துள்ளார்.
தியாகத் திருநாளில் மதச்சார்பின்மையையும் சமய நல்லிணக்கத்தையும் கடைபிடிக்க உறுதியேற்போம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், சரத் குமார், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீனும் தங்கள் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.