தாய் யானையை சுற்றி சுற்றி விளையாடும் ஒரு வயதே ஆன குட்டி யானை - க்யூட்டான வீடியோ
வனவிலங்குகள் இயற்கையுடன் இணைந்து உலாவருவது அவ்வப்போது இணையத்தில் வீடியோக்களாக வலம்வருவது வழக்கம். அதுபோல சமீபத்தில் யானைக்குட்டி தனது தாயுடன் இருக்கும் காட்சி பலரையும் குஷிப்படுத்தி உள்ளது.
கென்யாவில் உள்ள ஷெல்ட்ரிக் வனவிலங்கு அறக்கட்டளை ஒன்று அனாதை யானைக்குட்டிகளை மீட்டு, அவைகளுக்கு மறுவாழ்வு கொடுத்துவருகின்றன. இந்த அறக்கட்டளை, புதிதாகப் பிறந்த யானைக்குட்டி ஒன்று தனது தாயைச் சுற்றி விளையாடும் வீடியோ ஒன்றை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.
பிறந்து ஒருநாள் கூட முழுமையாகாத லப்பா என்ற யானைக்குட்டி ஒன்று தனது தாய் லெனானாவுடன் அந்தப் பகுதியையே சுற்றி வரும் வீடியோ அது. லெனானா மற்ற யானைகளுடன் தண்ணீர் குடிக்க போகும்போது, லப்பாவும் அதன் கால்களுக்கு நடுவே முன்னும் பின்னும் உற்சாகத்துடன் ஓடுகிறது. Pitter patter - அந்த சிறிய பாதங்களின் சத்தம் லப்பா, லெனானாவின் புதிய ஆண்குழந்தையுடையது. இத்தும்பா பகுதியில் ஷெல்ட்ரிக் அறக்கட்டளையால் வளர்க்கப்படும் 37வது யானைக்குட்டி இவன் என்று அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளனர்.
நெட்டிசன்களால் பெரிதும் விரும்பப்பட்ட இந்த வீடியோவை சில மணிநேரங்களுக்குள் 6.7 ஆயிரத்திற்கும் மேலான பார்வையாளர்களையும், பலரின் கருத்துக்களையும் பெற்றுள்ளது.