தடுப்பூசியால் கைக்குழந்தை உயிரிழப்பு ? - உறவினர்கள் சந்தேகம்

தடுப்பூசியால் கைக்குழந்தை உயிரிழப்பு ? - உறவினர்கள் சந்தேகம்

தடுப்பூசியால் கைக்குழந்தை உயிரிழப்பு ? - உறவினர்கள் சந்தேகம்
Published on

கடலூரில் தடுப்பூசி போட்ட 3 மாத குழந்தை உயிரிழந்ததாகக் கூறி உடலுடன் உறவினர்கள் காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் நடுவீரப்பட்டு அருகே உள்ள அணைக்கட்டு புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோபாலகிருஷணன் மற்றும் ஹேமலதா தம்பதியின் 3 மாதக் குழந்தைக்கு நேற்று தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அந்தக் குழந்தை இன்று அதிகாலை உயிரிழந்துள்ளது. அக்குழந்தையின் உடலுடன் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடுவீரப்பட்டு காவல்நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தடுப்பூசியால் தான் குழந்தை உயிரிழந்ததாகக் கூறிய பெற்றோர், சுகாதாரப் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். உடனடியாக குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநரிடம் கேட்டதற்கு, உயிரிழந்த குழந்தைக்குத் தடுப்பூசி போட்டது போல் 9 குழந்தைகளுக்குப் போடப்பட்டுள்ளதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பதால் மருந்தில் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் விளக்கமளித்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com