’உ.பி தேர்தலில் ஆசாத் சமாஜ் தனித்து போட்டியிடுகிறோம்; ஆனாலும்..’ - சந்திரசேகர் ஆசாத்

’உ.பி தேர்தலில் ஆசாத் சமாஜ் தனித்து போட்டியிடுகிறோம்; ஆனாலும்..’ - சந்திரசேகர் ஆசாத்

’உ.பி தேர்தலில் ஆசாத் சமாஜ் தனித்து போட்டியிடுகிறோம்; ஆனாலும்..’ - சந்திரசேகர் ஆசாத்

உத்தரபிரதேச தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக ஆசாத் சமாஜ் கட்சி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சந்திர சேகர் ஆசாத், "நாங்கள் உ.பி.யில் உள்ள மற்ற அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக இருப்போம். எம்.எல்.ஏ மற்றும் அமைச்சர் பதவிக்கான வாய்ப்புகளை நான் நிராகரித்துவிட்டேன். தேர்தலில் தனித்து போட்டியிடுவோம், இருப்பினும் காங்கிரஸுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது.

சமாஜ்வாதி கட்சி எங்களுக்கு 100 சீட் கொடுத்தாலும் நான் அவர்களுடன் செல்லமாட்டேன். தேர்தலுக்குப் பிறகு பாஜக ஆட்சியை தடுக்க மற்ற கட்சிகளுக்கு உதவுவோம். நானும் மாயாவதியுடன் கூட்டணி வைக்க முயற்சித்தேன், ஆனால் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை" என தெரிவித்தார்.

மேலும், " கடந்த ஐந்து ஆண்டுகளில் நான் நிறைய இழந்தேன். ஹத்ராஸ், பிரயாக்ராஜ் மற்றும் உன்னாவ் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டதற்காக நான் சிறைக்குச் சென்றேன். எதிர்க்கட்சிகளின் பிரிவினையால் பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அனைவருக்கும் இழப்பு தான். பீம் ஆர்மியின் தொண்டர்கள்தான் எங்கள் பலம்," என்று கூறினார்.

பீம் ஆர்மி தலைவர் சந்திர சேகர் ஆசாத் ஜனவரி 15 அன்று தனது கட்சியான ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி கட்சி இடையேயான கூட்டணிக்கான வாய்ப்பை நிராகரித்தார். இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணியை ஆசாத் உறுதிப்படுத்திய சில மணிநேரங்களிலேயே இந்த முடிவை அவர் அறிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com