\
முதலமைச்சரை சந்தித்த அய்யாக்கண்ணு: விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்

முதலமைச்சரை சந்தித்த அய்யாக்கண்ணு: விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்

முதலமைச்சரை சந்தித்த அய்யாக்கண்ணு: விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்
Published on

டெல்லியில் முதலமைச்சர் பழனிசாமியை தேசிய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு சந்தித்து பேசினார்.

தமிழ்நாடு இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது விவசாய கடன் தள்ளுபடி, நதிகள் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என முதல்வரிடம் அய்யாக்கண்ணு வலியுறுத்தினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அய்யாக்கண்ணு, விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் தமிழக அரசின் நிதிநிலைமை தற்போது சரியில்லை என தெரிவித்ததாகவும் கூறினார். பாரதிய ஜனதா கட்சியினரிடம் இருந்து தமக்கு கொலை மிரட்டல் வந்ததாகவும் அய்யாக்கண்ணு குற்றம்சாட்டினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com