அவக்கோடா பழங்கள் காய்த்திருக்கு.. ஆனால் காசுபார்க்க முடியவில்லை... கவலையில் விவசாயிகள்..!

அவக்கோடா பழங்கள் காய்த்திருக்கு.. ஆனால் காசுபார்க்க முடியவில்லை... கவலையில் விவசாயிகள்..!

அவக்கோடா பழங்கள் காய்த்திருக்கு.. ஆனால் காசுபார்க்க முடியவில்லை... கவலையில் விவசாயிகள்..!
Published on

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காய்த்துள்ள அவக்கோடா பழங்களை விற்று காசுபார்க்க முடியவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் அவக்கோடா பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இங்கு காய்க்கக்கூடிய தாய்பாலுக்கு நிகரான சத்துக்களைக் கொண்ட அவக்கோடா பழங்கள் (வெண்ணைப்பழம்) சென்னை கோயம்பேடு சந்தை மற்றும் தமிழகத்தின் பெரு நகரங்களில் உள்ள சந்தைகளுக்கு அனுப்பப்படும். 

ஆனால் கொரோனா பொதுமுடக்கத்தால் அவக்கோடா பழங்களை விற்பனைக்கு அனுப்பப்படும் சந்தைகள் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருப்பதால் அவக்கோடா பழங்களில் விலை தொடர் வீழ்ச்சியில் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.


கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் கொடுத்தாலும், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநில வியபாரிகள் மலைப்பகுதிக்கு வர முடியவில்லை அதனால் தமிழக அரசு விரைவில் மாநில எல்லைகளை திறந்து விவசாய பொருட்களை விற்பனை செய்ய உதவ வேண்டுமென விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com