\
”ஆட்டோ சின்னம் ரஜினியின் வாகனம் என்பது பெருமைக்குரிய விஷயம்”  - பாரிவேந்தர்

”ஆட்டோ சின்னம் ரஜினியின் வாகனம் என்பது பெருமைக்குரிய விஷயம்” - பாரிவேந்தர்

”ஆட்டோ சின்னம் ரஜினியின் வாகனம் என்பது பெருமைக்குரிய விஷயம்” - பாரிவேந்தர்
Published on: 

அரியலூர் சட்டமன்ற தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் போராசியர் ஜவகரை ஆதரித்து இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது பேசிய அவர் “53 ஆண்டுகள் செய்ய முடியாததை தற்போது திராவிட கட்சிகள் செய்வார்களா? இரண்டு கட்சிகளும் மாறி மாறி ஊழல் குற்றம் சாட்டிவருகின்றன. அவர்கள் மட்டும் சொல்லவில்லை நாடே சொல்கிறது. இந்த நிலையில் நீங்கள் ஏன் ஊழல் கட்சிகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு வளரவேண்டுமா? மாற்றம் வேண்டாமா?. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற இவர்களிடம் எந்த திட்டமும் இல்லை. பணமும் இல்லை. ஆதலால் ஒரு முறை மாற்றி வாக்களித்து பாருங்கள். இந்திய ஜனநாயக கட்சியின் சின்னம் ஆட்டோ சின்னம். ஏழைகளின் எளிய மக்களின் வாகனம். ரஜினியின் வாகனம் என்பது பெருமைக்குரிய விஷயம். ” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com