அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி: பிரியங்கா காந்தி

அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி: பிரியங்கா காந்தி

அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க பாஜக முயற்சி: பிரியங்கா காந்தி
Published on

பாஜக ஆட்சியில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையே அழிக்கும் முயற்சி நடப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் உத்தரப்பிரதேச மாநில கிழக்கு பகுதி தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரியங்கா, அசாம் மாநிலத்தில் பரப்புரை மேற்கொண்டார். சில்சார் என்ற இடத்தில் திறந்தவெளி ஜீப்பில் சென்று, வேட்பாளர் சுஷ்மா தேவை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய பிரியங்கா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா என உலகின் பல்வேறு நாடுகளை சுற்றி வரும் பிரதமர் மோடிக்கு, அவரது சொந்த தொகுதியான வாரணாசியில் செலவழிக்க நேரமில்லையா..? என கேள்வி எழுப்பினார்.

வாரணாசியில் உள்ள எந்த ஒரு குடும்பத்துடனாவது அவர், ஐந்து நிமிடமேனும் நேரம் செலவழித்துள்ளாரா என்று பிரியங்கா வினவியுள்ளார். மேலும், அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு அனைத்து தலைவர்களும் உரிய மரியாதை அளித்து வருவதாகக் கூறிய அவர், பாஜக ஆட்சியில் அரசமைப்புச் சட்டத்தை அழிக்கும் முயற்சிகள் நடந்து வருவதாக விமர்சித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com