துணிக்கடை ஊழியர்கள் மீது, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்திய விவகாரத்தில், கட்சி நிர்வாகி விநாயகம் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் மாவட்டம் பனப்பாக்கம் பஜார் வீதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான துணிக்கடை இயங்கி வருகிறது. அங்கு சென்ற நபர்கள் சிலர், திருமாவளவனின் பிறந்தநாள் விழாவுக்கு நன்கொடை கேட்டதாகக் கூறப்படுகிறது. கடை ஊழியர் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரமடைந்த அவர்கள், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதையடுத்து தாக்குதல் நடத்திய கட்சி நிர்வாகி விநாயகம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது.