\
சென்னையில் இதுவரை 800 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இதுவரை 800 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு

சென்னையில் இதுவரை 800 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு
Published on

சென்னையில் மட்டும் 800 காவலர்களுக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் 1500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். முன்பு பொதுமக்கள் மத்தியில் மட்டும் பரவி வந்த கொரோனா தொற்று சமீப காலமாக கொரோனா தடுப்பு முன்னணி வீரர்களான காவல், மருத்துவம் மற்றும் சுகாதாரம் சார்ந்த பணியாளர்கள் மத்தியிலும் வேகமாக பரவி வருகிறது.


அந்த வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் பால முரளி உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது அவரது இறுதிச் சடங்கில் பங்கு கொண்ட ஐபிஸ் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 800 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் தற்போது 321 பேர் குணமடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com