\
திமுகவுடன் இருந்ததற்கு வெட்கப்படுகிறேன்: டி.ராஜேந்தர்

திமுகவுடன் இருந்ததற்கு வெட்கப்படுகிறேன்: டி.ராஜேந்தர்

திமுகவுடன் இருந்ததற்கு வெட்கப்படுகிறேன்: டி.ராஜேந்தர்
Published on

மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது தி.மு.க., தான் என்றும், அக்கட்சியுடன் தான் இருந்ததற்கு வெட்கப்படுவதாகவும் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.

ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலத்தில் தொடர்ந்து 70-ஆவது நாளாக அக்கிராம மக்கள் பல்வேறு நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று அவர்கள் உணவுக்கு பதில் முள் சாப்பிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர் இன்று அவர்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார். அப்போது, மீத்தேன் திட்டத்திற்கு அனுமதி அளித்தது தி.மு.க. தான் என்றும், அக்கட்சியுடன் தான் இருந்ததற்கு வெட்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர், மத்திய பாஜக அரசுக்கு தமிழ‌க அரசு பயப்படுகிறது என்று கூறினார். மேலும் அதனால்தான் இந்தத் திட்டத்தை தடுக்க மறுத்து, அதற்காக போராடும் மக்களை கைது செய்வதாகவும் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com