இருசக்கர வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர்

இருசக்கர வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர்
இருசக்கர வாகனத்தில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்த அருப்புக்கோட்டை அதிமுக வேட்பாளர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் இருசக்கர வாகனத்தில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அருப்புக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் வைகைச்செல்வன் தனது பிரச்சாரத்தில் தொடர்ந்து பல்வேறு யுக்திகளை கையாண்டு இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்து வருகிறார் பறை இசைத்தும் துணிகளுக்கு இஸ்த்திரி போட்டுக்கொடுத்தும் வாக்காளர்களை கவரும் வகையில் பல்வேறு வியூகங்களை கையாண்டு நூதன முறையில் உற்சாகமாக வாக்கு சேகரித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று புளியம்பட்டி, வேலாயுதபுரம், திருநகரம் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்ட வைகைச்செல்வன் வாகனங்கள் செல்லமுடியாத குறுகிய பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தார். தொடர்ந்து நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் வைகைச்செல்வனின் தேர்தல் பிரச்சாரம் வாக்காளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com