டிரெண்டிங்
ஜெயலலிதா நினைவிடத்தில் மத்திய அமைச்சர்கள் அஞ்சலி
ஜெயலலிதா நினைவிடத்தில் மத்திய அமைச்சர்கள் அஞ்சலி
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இணக்கமாக இருந்தவராக அறியப்படும் அருண் ஜேட்லி, தமிழகத்துக்கு வந்துள்ளார். ஜிஎஸ்டி தொடர்பான சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கருத்தரங்கத்தில் கலந்துகொள்வதற்காக அவர் சென்னை வந்துள்ளார். அவருடன் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் வந்துள்ளார். சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர்கள் மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அவர்களுடன் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமாரும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.