நாப்கின்கள் நச்சுத்தன்மையுள்ள கெமிக்கலால் செய்கிறார்களா? - எச்சரிக்கும் விடுக்கும் மருத்துவர்கள்!

பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் சுகாதாரமானதுதானா? மாற்று வழி என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு
வீடியோ ஸ்டோரி
வீடியோ ஸ்டோரிPT

பெண்கள் பயன்படுத்தும் நாப்கின்கள் சுகாதாரமானதுதானா? மாற்று வழி என்ன என்பது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு

மருத்துவர் ராதிகா இது குறித்து பேசுகையில், ”ஒரு பெண் ஒரு மாசத்துல 15 முதல் 20 நாப்கின்கள் வரை பயன்படுத்துறாங்க. 12 மாசத்துக்கு 240க்கும் அதிகமான நாப்கின்கள யூஸ் பண்ணி டிஸ்போஸ் பன்றாங்க. இந்தியாவுல ஓராண்டுல மட்டும் 13,000 டன் நாப்கின்கள பயன்படுத்தி டிஸ்போஸ் பன்றாங்க. இதுல அதிர்ச்சி தரக்கூடிய விஷயம் என்னன்னா, நாம யூஸ் பன்ற, சானிட்ரி நாப்கின்ஸ்ல ஹார்ம்புல் கெமிக்கலான PHTHALATES, CARCINOGENS, டையாக்ஸிலின் இருக்கிறதா, நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆப் ஹெல்த் ஆர்கனைசேஷன் சொல்லிருக்காங்க.

மருத்துவர் ராதிகா.
மருத்துவர் ராதிகா.

நாம பயன்படுத்துற நாப்கின்ல நச்சுத்தன்மையுள்ள கெமிக்கலால் செய்யப்படுகின்ற நாப்கினால் தோல் அரிப்பு, PCOS PCOD கருக்குழாயில் கட்டி, கற்பபை வாயில் புற்றுநோய் ஆகியவை தோன்றலாம். இந்த நாப்கின்ஸ்னால மண் வளமும் கெட்டுப்போறதா சொல்றாங்க” என்று எச்சரிக்கிறாங்க.

சென்னை மாநகர தூய்மைப் பணிகளுக்கான மேற்பார்வையாளர் ஸ்ரீதேவி பேசும்போது,

நம்ம டிஸ்போஸ் பன்ற இதுபோன்ற ஹார்ம்புல் நாப்கின்ஸ்கள் மக்குவதற்கு மட்டும் 100 முதல் 300 ஆண்டுகள் ஆவதா சொல்றாங்க ஆய்வாளர்கள் எளிதில் மக்கும்தன்மை இல்லாத நாப்கின்களை பயன்படுத்துவதால், பெண்களின் கருப்பையும் பாதுகாக்கப்படுவதோடு, மண்ணோட வளமும் பாதுகாக்கப்படுகிறது.”

ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி

இனிமேல் உங்க வீட்டுல இருக்க அக்கா, தங்கை, மனைவி, அம்மாகிட்ட கட்டாயம் பயோ-டிகிரேடபுள் நாப்கின்ஸ யூஸ் பன்றீங்களானு கேளுங்க..” என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com