பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைப்பிற்கு பின் ஏற்பு

பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைப்பிற்கு பின் ஏற்பு
பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்திவைப்பிற்கு பின் ஏற்பு

அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியின் பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டு பின் ஏற்கப்பட்டுள்ளது.

தமிழக பாஜக துணை தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்நிலையில் தன் மீதான வழக்குகள் குறித்து அண்ணாமலை வேட்பு மனுவில் குறிப்பிடவில்லை என்ற எதிர்க்கட்சியினர் புகாரை அடுத்து அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரிகள் சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர். பின்னர் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு அவரது மனு ஏற்கப்பட்டது.

முன்னதாக பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத் தாக்கல் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்றது. வேட்பு மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது. நாளை மறுநாள் பிற்பகல் 3 மணிக்குள் வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம். அன்றைய தினம் மாலை 5 மணிக்குள் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மே 2 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com