அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆ.ராசா பரப்புரை செய்யத் தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆ.ராசா பரப்புரை செய்யத் தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு
அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆ.ராசா பரப்புரை செய்யத் தடை: தேர்தல் ஆணையம் உத்தரவு

ஆ.ராசா 2 நாட்களுக்கு பரப்புரை செய்ய தடை விதித்து தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் நட்சத்திர பேச்சாளர் பட்டியல் இருந்து ஆ.ராசாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாய் குறித்து, திமுக எம்.பி ஆ.ராசா பரப்புரையில் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து ஆ.ராசா தன் பேச்சு குறித்து விளக்கமளித்ததோடு முதலமைச்சர் உண்மையிலேயே கலங்கியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து ஆ.ராசா விளக்கம் அளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையமும் கோரியிருந்தது. அதனைத்தொடர்ந்து அவர் வெளியிட்ட விளக்க கடிதத்தில்  “உவமானம் என்ற முறையிலேயே மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமியை ஒப்பிட்டு பேசினேன். முதல்வர் கண்கலங்கியது அறிந்து மன்னிப்பும் கோரியுள்ளேன். தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் நான் எதுவும் பேசவில்லை. எனது பேச்சின் முழு வீடியோவையும் பார்த்தால் தற்போதைய குற்றச்சாட்டு அரசியல் ரீதியாக திரித்து வெளியிடப்பட்டது தெரியும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் ஆ.ராசா மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com