\
சென்னையில் 200 வார்டுகளுக்கான உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம்

சென்னையில் 200 வார்டுகளுக்கான உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம்

சென்னையில் 200 வார்டுகளுக்கான உதவி தேர்தல் அலுவலர்கள் நியமனம்
Published on

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்ற நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பணிகளை தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது. தேர்தல் அலுவலர்களை நியமிக்க வேண்டும் என அண்மையில் தேர்தல் ஆணையம் மண்டல வாரியாக சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களை நியமித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். 4 முதல் 7 வார்டுகளுக்கு ஒரு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் என்ற அடிப்படையில், 33 உதவி வருவாய் அலுவலர்கள் நியிமிக்கப்பட்டுள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com