\
அப்போலோ, எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்: திருமாவளவன்

அப்போலோ, எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்: திருமாவளவன்

அப்போலோ, எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்: திருமாவளவன்
Published on

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ, எய்ம்ஸ் மருத்துவர்களும் விசாரிக்கப்பட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 22ஆம் தேதி ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, அவரின் உடல்நிலை என்ன நிலையில் இருந்தது என்பது குறித்த முதல் மருத்துவ அறிக்கைவை வெளியிட்ட புதிய தலைமுறைக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஜெயலலிதாவின் சர்க்கரையின் அளவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது 508 எம்ஜி என்ற அளவில் இருந்துள்ளது. இது மயக்க நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய அளவு அல்ல” என்றார்.

மேலும், “ஜெயலலிதாவை நான் சந்திக்க சென்ற போது, காவல்துறையினர் தடுத்தார்கள். 20 நிமிடம் என்னை காக்க வைத்தனர். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து அறிய முடியாத அளவிற்கு, அதனை தடுக்கும் செயலில் ஈடுபட்டவர்கள் யார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் உள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ, எய்ம்ஸ் மருத்துவர்கள் விசாரிக்கப்பட வேண்டும். இதுகுறித்து மத்திய அரசும் பதில் சொல்ல வேண்டிய தேவை இருக்கிறது” என்றார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com