சமூகவிரோத ஆளுமைக் கோளாறு ஒரு மனநல பிரச்னை - அறிகுறிகள், காரணங்கள் என்ன?

சமூகவிரோத ஆளுமைக் கோளாறு ஒரு மனநல பிரச்னை - அறிகுறிகள், காரணங்கள் என்ன?
சமூகவிரோத ஆளுமைக் கோளாறு ஒரு மனநல பிரச்னை - அறிகுறிகள், காரணங்கள் என்ன?

சமூகவிரோத ஆளுமைக் கோளாறு (Antisocial personality disorder) என்பதை சில நேரங்களில் சமூகவியல் என்றும் அழைக்கலாம். இது ஒரு மனநலக்கோளாறு. இதில் ஒரு நபர் தொடர்ந்து சரியாக அல்லது தவறாக கருதாமல் மற்றவர்களின் உணர்வு மற்றும் உரிமைகளைப் புறக்கணிக்கும் மனநிலை கொண்டவராக இருப்பர். ஏ.எஸ்.பி.டி இருப்பவர்கள் மற்றவர்களை கடுமையாக அல்லது மிகவும் அலட்சியமாக விரோதிபோல் நடத்துவார்கள். ஆனால் தங்கள் நடத்தைக் குறித்து எந்த குற்ற உணர்ச்சியும் இருக்காது.

குற்ற உணர்ச்சியே இல்லாமல் இருப்பதால் ஏ.எஸ்.பி.டி பிரச்னை உள்ளவர்கள் பெரும்பாலும் சட்டத்தை மீறி குற்றவாளிகளாக மாறுகிறார்கள். அவர்கள் பொய் சொல்லலாம், வன்முறையாக அல்லது மனக்கிளர்ச்சியுடன் நடந்து கொள்ளலாம், போதை மற்றும் ஆல்கஹால் பயன்படுத்தலாம். இந்த குணாதிசயங்கள் காரணமாக, இந்த கோளாறு உள்ளவர்கள் பொதுவாக குடும்பம், வேலை அல்லது பள்ளி தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்ற முடியாது.

அறிகுறிகள்

  • சரி, தவறு என்று புறக்கணிக்க மாட்டார்கள்
  • மற்றவர்களை வம்பு இழுத்தல், தொடர்ந்து பொய் அல்லது வஞ்சகம்
  • கடுமையான, இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துதல் மற்றும் பிறருக்கு அவமரியாதை உண்டாக்குதல்
  • தனிப்பட்ட லாபத்திற்காக அல்லது தனிப்பட்ட இன்பத்திற்காக மற்றவர்களிடம் அன்பாக நடந்துகொள்வது அல்லது புத்திசாலித்தனத்தைப் பயன்படுத்துவது
  • ஆணவம், பெருமை உணர்வு மற்றும் கருத்து ஆதிக்கம் செலுத்துதல்
  • குற்ற நடத்தை உட்பட சட்டத்திற்கு விரோதமாக நடந்துகொள்ளுதல்
  • மிரட்டல் மற்றும் நேர்மையின்மை மூலம் மற்றவர்களின் உரிமைகளை மீண்டும் மீண்டும் சீண்டுதல்
  • முன்கூட்டியே திட்டமிட்டு மற்றவர்களை தோற்கடித்தல்
  • விரோதம், குறிப்பிடத்தக்க எரிச்சல், கிளர்ச்சி, ஆக்கிரமிப்பு அல்லது வன்முறை
  • மற்றவர்களிடம் பட்சபாதம் இல்லாதது, மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பதில் வருத்தம் இல்லாதது
  • சுய அல்லது பிறரின் பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் தேவையற்ற ஆபத்து அல்லது ஆபத்தான நடத்தை
  • மோசமான அல்லது தவறான உறவுகள்
  • நடத்தையின் எதிர்மறையான விளைவுகளை கருத்தில் கொள்ளாமை
  • தொடர்ச்சியாக பொறுப்பற்றவராக இருப்பது மற்றும் வேலை அல்லது நிதிக் கடமைகளை நிறைவேற்றத் தவறுவது


காரணங்கள்

பொதுவாக ஆளுமை என்பது எண்ணம், உணர்ச்சி மற்றும் நடத்தை ஆகியவற்றின் கலவை. இது வெளி உலகத்தை மக்கள் பார்க்கும், புரிந்துகொள்ளும் மற்றும் தொடர்புபடுத்தும் விதம். அதே போல் அவர்கள் தங்களை எவ்வாறு பார்க்கிறார்கள் என்பதும் இதில் அடங்கும். குழந்தை பருவம், பரம்பரை போக்கு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளால் வடிவமைக்கப்படுகின்றன.

சமூக விரோத ஆளுமைக் கோளாறுக்கான சரியான காரணம் அறியப்படவில்லை. ஆனால் சமூக விரோத ஆளுமைக் கோளாறு உருவாக மரபணு மாற்றங்களும் ஒரு காரணம். மேலும் வாழ்க்கை சூழ்நிலைகள் அதன் வளர்ச்சியைத் தூண்டக்கூடும்.
மூளை வளர்ச்சியின்போது மூளை செயல்பாட்டு மாற்றங்களால்கூட பாதிப்புகள் வரலாம்.

சமூக விரோத ஆளுமைக் கோளாறு பிரச்னை இருப்பவர்களுக்கு இந்த அறிகுறிகள் 15 வயதிற்கு முன்னதாகவே தெரியும். அறிகுறிகள் தீவிரமாகும்போது, நடத்தை சிக்கல்கள் உருவாகும். மக்கள் மற்றும் விலங்குகள் மீது அதீத ஆக்கிரமிப்புகளை செலுத்துதல், சொத்துக்களை அழித்தல், வஞ்சகம், திருட்டு, கடுமையான விதிகளை மீறுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். எனவே மனநல நிபுணரை அணுகுவது நல்லது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com