ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து டிசம்பர் 3ஆம் தேதி அறிவிப்பு: வைகோ

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து டிசம்பர் 3ஆம் தேதி அறிவிப்பு: வைகோ

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து டிசம்பர் 3ஆம் தேதி அறிவிப்பு: வைகோ
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதிமுகவின் நிலைப்பாடு குறித்து டிசம்பர் 3ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் திமுகவைச் சேர்ந்த மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை திமுகவுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளது. இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதிமுக நிலைப்பாடு குறித்து டிசம்பர் 3ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், சென்னை அண்ணா சாலையில் தொடர்ந்து 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் பிரபலமான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று பாஜக அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர் குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகாத நிலையில் வைகோ, 3ஆம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com