பழத்தோல்களில் இருந்து ஹேண்ட்பேக்ஸ்! புது நிறுவனம் தொடங்கிய நடிகர் அர்ஜூனின் மகள்

பழத்தோல்களில் இருந்து ஹேண்ட்பேக்ஸ்! புது நிறுவனம் தொடங்கிய நடிகர் அர்ஜூனின் மகள்

பழத்தோல்களில் இருந்து ஹேண்ட்பேக்ஸ்! புது நிறுவனம் தொடங்கிய நடிகர் அர்ஜூனின் மகள்
Published on

பழங்களின் தோல்களை கொண்டு ஹேன்ட் பேக்குகளை உருவாக்கியுள்ளார் நடிகர் அர்ஜுன் மகள் அஞ்சனா அர்ஜுன்.

திரைப்பட நடிகர் அர்ஜுனின் இரண்டாவது மகளான அஞ்சனா அர்ஜுன், அன்றாடம் நாம் உண்ணும் பழங்களின் தோல்களை கொண்டு அழகழகான ஸ்டைலிஷ் ஹேன்ட் பேக்குகளை உருவாக்கி இருக்கிறார்.

பழத்தோல்களிலிருந்து பைகள் உருவாக்கப்படுவது, உலகத்திலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹேன்ட் பேக்குகளை விற்பனை செய்ய சர்ஜா என்ற பெயரில், புதிய நிறுவனத்தை அவர் துவங்கி உள்ளார்.

இந்த நிறுவனத்தின் தொடக்க விழா நேற்று மாலை ஹைதராபாத்தில் நடைபெற்றது. விழாவில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி விஜய ஈஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்‌ஷரா ஹாசன், அர்ஜூனின் மூத்த மகள் ஐஷ்வர்யா அர்ஜூன் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.

பின் தங்களின் நிறுவனம் குறித்தும், இதன் தயாரிப்புகள் குறித்தும் அர்ஜூன் மற்றும் அவரது மகள் அஞ்சனா ஆகியோர் அனைவர் முன்னிலையிலும் தகவல்கள் பகிர்ந்து, விற்பனையை துவங்கி வைத்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com