ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதா மரணம் நிகழ்ந்திருக்காது : வைகோ பேச்சு

ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதா மரணம் நிகழ்ந்திருக்காது : வைகோ பேச்சு

ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதா மரணம் நிகழ்ந்திருக்காது : வைகோ பேச்சு
Published on

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா இருந்திருந்தால் அனிதாவின் தற்கொலை நடந்திருக்காது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சியில் கட்சி நிர்வாகியின் திருமணவிழாவில் கலந்துகொண்ட அவர், 'காலப்போக்கில் மாணவர் சமுதாயம் எதிர்த்து போராடும் என நம்புகிறேன். ஜெயலலிதா நீட் தேர்வை கடுமையாக எதிர்த்து வந்தார். அவர் உயிருடன் இருந்திருந்தால் அனிதாவின் மரணம் நிகழ்ந்திருக்காது. ம.தி.மு.க விசுவாசிகளாக சமூக வலைதளங்களில் செயல்பட்டு வந்த பலர் தற்போது அ.தி.மு.கவின் மூன்று அணிகளில் ஒரு அணிக்கு மறைமுகமாக ஆதரவு தெரிவித்து செயல்பட்டு வரும் ரகசியம் எனக்கு தெரியும்’ எனத் தெரிவித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com