டிரெண்டிங்
ஒரு தாயின் பாசப்போராட்டம்: வெள்ளத்தில் சிக்கிய நாய்க்குட்டிகள்.. இறுதியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!
ஆந்திராவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் தாயை பிரிந்த நாய்க்குட்டிகளை மீட்ட காவல்துறையினர், அவற்றை அதன் தாயிடம் பத்திரமாக சேர்த்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கச் சென்ற காவலர்களின் வாகனத்தை, தெரு நாய் ஒன்று வாலை ஆட்டியபடி சுற்றிச் சுற்றி வந்துள்ளது. முதலில் காரணம் தெரியாமல் குழம்பிய போலீசார், பின் அதன் குட்டி வெள்ளத்தில் சிக்கியதை கண்டறிந்தனர்.
இதையடுத்து குட்டிகளை பத்திரமாக மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனர். தன் குட்டிகளை மீட்டவர்களுக்கு அந்த நாய் கைகளை முகர்ந்து நன்றி கூறியது காண்போரை நெகிழவைத்தது. அந்த வீடியோவை, செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...