உற்சாகத்துடன் நடனமாடி வாக்கு சேகரித்த அணைகட்டு திமுக வேட்பாளர்!

உற்சாகத்துடன் நடனமாடி வாக்கு சேகரித்த அணைகட்டு திமுக வேட்பாளர்!

உற்சாகத்துடன் நடனமாடி வாக்கு சேகரித்த அணைகட்டு திமுக வேட்பாளர்!
Published on

அணைகட்டு எம்.எல்.ஏ.வும், அந்தத் தொகுதியின் திமுக வேட்பாளருமான ஏ.பி.நந்தகுமார் வாக்கு சேகரிப்பின்போது மக்களுடன் நடனமாடி கவனத்தை ஈர்த்தார்.

வேலூர் மாவட்டம் அணைகட்டு தொகுதியில் தி.மு.க சார்பில் மீண்டும் களம் காண்கிறார் ஏ.பி.நந்தகுமார். இவர் சனிக்கிழமை இரவு விரிஞ்சிபுரம் டாக்டர் அம்பேத்கர் நகர் பகுதியில் வேன் மூலம் பிரச்சாரம் மேற்க்கொண்டார். அப்போது வேட்பாளரை வரவேற்க மேளதாளத்துடன் கட்சியினர் வரவேற்றனர்.

அங்கிருந்த மக்களும் உற்சாகமாக நடனமாடினர். இதனை கண்ட வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார், வேனில் இருந்து இறங்கி பொதுமக்களுடன் ஒன்றாக சேர்ந்து உற்சாகத்துடன் நடனமாடினார். பின்னர், தனக்கு வாக்களிக்கும்படி பொதுமக்களை கேட்டுக்கொண்டார். எதிர்பாராத விதமாக வேட்பாளர் பொதுமக்களிடம் நடனமாடியது அங்குள்ளவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.

- ச.குமரவேல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com