ஒசூர் தொகுதி அமமுக வேட்பாளர் புகழேந்தி - டிடிவி அறிவிப்பு

ஒசூர் தொகுதி அமமுக வேட்பாளர் புகழேந்தி - டிடிவி அறிவிப்பு
ஒசூர் தொகுதி அமமுக வேட்பாளர் புகழேந்தி - டிடிவி அறிவிப்பு

ஒசூர் தொகுதி அமமுக வேட்பாளராக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அவற்றின் கூட்டணி கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. 

தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக வேட்பாளர்களை அறிவித்திருந்த நிலையில், தற்போது மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஒசூர் தொகுதியில் நடைபெறும் சட்டமன்ற இடைத்தேர்தலில், அமமுகவின் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற பொறுப்பாளரும், கர்நாடக மாநில கழக செயலாளருமான புகழேந்தி களமிறங்குகிறார். புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக சார்பில் என்.தமிழ்மாறன் போட்டியிடுகின்றார்.  

அதேபோல், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஞான அருள்மணிக்கு பதிலாக முன்னாள் எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் வேட்பாளராக மாற்றப்பட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com