\
தேமுதிக - அமமுக இடையே விரைவில் தொகுதி பங்கீடு?

தேமுதிக - அமமுக இடையே விரைவில் தொகுதி பங்கீடு?

தேமுதிக - அமமுக இடையே விரைவில் தொகுதி பங்கீடு?
Published on: 

அம்மா மக்கள் முன்னேற்ற கழகமும், தேமுதிகவும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இன்று பேச்சு நடத்துகின்றன.

அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக தேர்தலில் தனித்து போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. முதல்கட்டமாக 140 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை தயாரித்து விட்டதாகவும் சொல்லப்பட்டது. இதனிடையே கூட்டணி பேச்சுவார்த்தைக்காக மக்கள் நீதி மய்யம் தேமுதிகவுக்கு அழைப்பு விடுத்தது. ஆனால் தேமுதிக பேச்சுவார்த்தையில் பங்கேற்கவில்லை.

அதனைத் தொடர்ந்து தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியானது. அதனை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் உறுதி செய்தார். இந்நிலையில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு தொடர்பாக தேமுதிக - அமமுக இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com