அமித்ஷா வருகை திருப்புமுனையாக இருக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்

அமித்ஷா வருகை திருப்புமுனையாக இருக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்
அமித்ஷா வருகை திருப்புமுனையாக இருக்கும் - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கும் என்றும் மற்ற கட்சிகளுக்கு வளர்ப்புத்தந்தையாக இருக்க பாரதிய ஜனதா கட்சிக்கு விருப்பம் இல்லை என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

ரயில்வே துறை மூலம் தமிழகத்தில் 15 திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. காணொலி காட்சி மூலம் இந்த திட்டங்களை ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தொடங்கி வைத்தார். இதற்காக 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை முதல் கன்னியாகுமரி வரை 4 வழிச்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலைத்துறை தமிழக அரசிடம் நிலம் கேட்டுள்ளதாகவும் மாநில அரசு அதனை ஒதுக்கித்தர வேண்டும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், வரும் 22, 23, 24 ஆகிய தேதிகளில் பாரதிய ஜனதா தேசிய தலைவர் அமித் ஷா வருகை தர உள்ளதாகவும், அவரது வருகை ஒரு திருப்பு முனையாக இருக்கும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com