அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை
அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும்: அமித் ஷா நம்பிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாகர்கோவில் வந்தார். காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாகர்கோவில் மறவன் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்கிய அமித்ஷா, பின்னர் 10.10 மணிக்கு அங்கிருந்து சுசீந்திரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.

இதையடுத்து, 10.35 மணிக்கு சுசீந்திரம் நகர மக்களிடம் ‘வெற்றிக்கொடி ஏந்தி வெல்வோம்’ என்ற நிகழ்ச்சியை தொடங்கி வைத்து அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார். கன்னியாகுமரி மக்களவைத் இடைத்தேர்தலில் போட்டியிடும் பொன் ராதாகிருஷ்ண‌னுக்கு ஆதரவாக வீடுவீடாக சென்றும் அமித்ஷா வாக்கு சேகரித்து வருகிறார்.

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோயில் முன்பு உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணியைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். பொன். ராதாகிருஷ்ணனை கன்னியாகுமரி தொகுதி மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். இந்தத் தேர்தல் மூலம் தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரவேண்டும். அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது” என்று கூறினார். 

அமித் ஷா உடன் பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் இடைத்தேர்தலில் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் பாஜக இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com