நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!

நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!

நாகர்கோவிலில் இன்று அமித் ஷா பரப்புரை!
Published on

சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இன்று நாகர்கோவிலுக்கு வருகை தருகிறார்.

திருவனந்தபுரத்திலிருந்து, காலை பத்து மணிக்கு ஹெலிகாப்டரில் நாகர்கோவிலில் உள்ள ஏ.ஆர்.கேம்ப் தளத்தை அடைகிறார் அமித் ஷா. அங்கிருந்து காரில் சுசீந்திரத்தில் உள்ள பழமையான தாணுமாலய சுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். பின்னர் பத்தே முக்கால் மணிக்கு, சுசீந்திரத்தில் வெற்றிக் கொடியேந்தி வெல்வோம் என்ற பெயரில் பாஜகவின் மக்கள் தொடர்பு நிகழ்ச்சியை அமித் ஷா தொடக்கி வைக்கிறார். அங்கு 5 வீடுகளுக்குச் சென்று ஸ்டிக்கர் ஒட்டி வாக்கு சேகரிக்கிறார் அமித் ஷா. இதைத் தொடர்ந்து, 11.15 மணிக்கு நாகர்கோவில் செல்லும் அமித் ஷா, நீலவேணி அம்மன் கோயிலின் பூரண கும்ப மரியாதையைப் பெறுகிறார்.

மேலும், மீனாட்சிபுரம் சந்திப்பிலிருந்து வேப்பமூடு சந்திப்பு வரை நடைபெறும் கொடி பேரணியில் பங்கேற்கிறார். வேப்பமூடு சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு அமித் ஷா மாலை அணிவிக்கிறார். பின்னர் வடசேரி பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில், பாரதிய ஜனதாவின் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் 2 மணிக்கு மீண்டும் ஏ.ஆர்.கேம்ப் தளத்துக்குச் செல்லும் அமித் ஷா, ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் புறப்படுகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com