\
"தமிழக மக்களைப் பற்றி கவலைப்பட மோடியைவிட சிறந்த தலைவர் இல்லை" - அமித் ஷா

"தமிழக மக்களைப் பற்றி கவலைப்பட மோடியைவிட சிறந்த தலைவர் இல்லை" - அமித் ஷா

"தமிழக மக்களைப் பற்றி கவலைப்பட மோடியைவிட சிறந்த தலைவர் இல்லை" - அமித் ஷா
Published on

தமிழக மக்களைப் பற்றி கவலைப்பட மோடியைவிட சிறந்த தலைவர் இல்லை என உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

தமிழகத்தில் வருகிற 6ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும், தலைவர்களும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட பல தேசிய தலைவர்கள் தமிழகத்திற்கு வருகைபுரிந்து வருகின்றனர்.

இன்று விழுப்புரம் மாவட்ட திருக்கோவிலூர் தொகுதியில் போட்டிடும் பாஜக வேட்பாளரை ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டு வரும் அமித் ஷா, தமிழக மக்களைப் பற்றி கவலைப்பட மோடியைவிட சிறந்த தலைவர் இல்லை எனக் கூறியுள்ளார்.

மேலும் தமிழ்மொழி மீதும், தமிழக மக்கள்மீதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி எனவும், பெண்களை இழிவுபடுத்தும் திமுக கூட்டணிக்கு மக்கள் தக்க பாடம் புகட்டவேண்டுமெனவும் விழுப்புரத்தில் பேசிய அமித் ஷா கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சோனியாவிற்கு ராகுலை பற்றியும், ஸ்டாலினுக்கு உதயநிதியை பற்றியும்தான் கவலை எனவும் அமித் ஷா எதிர்க்கட்சியினரை விமர்சித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com