துளிர்க்கும் நம்பிக்கை: "தமிழ் மக்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி" - அமெரிக்கா வாழ் தமிழர்

துளிர்க்கும் நம்பிக்கை: "தமிழ் மக்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி" - அமெரிக்கா வாழ் தமிழர்

துளிர்க்கும் நம்பிக்கை: "தமிழ் மக்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சி" - அமெரிக்கா வாழ் தமிழர்
Published on

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவும் வகையில் உன்னதமான பணியை முன்னெடுக்கும் புதிய தலைமுறையின் துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சிக்கு, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் தேனியைச் சேர்ந்த மணிவண்ணன் குடும்பத்தினர் ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை அளித்துள்ளனர். துளிர்க்கும் நம்பிக்கை நிகழ்ச்சி மூலம் தமிழ் மக்களுக்கு உதவுவது மகிழ்ச்சி அளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

- புதிய தலைமுறையின் 'துளிர்க்கும் நம்பிக்கை' உதவி மையத்துக்கு வந்துகொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அழைப்புகளில் சமீபத்தில் வந்த கோரிக்கைகளை நிறைவேற்ற கிடைத்திருக்கும் சிறு உதவி இது. இந்த எளியவர்களை கரை சேர்க்க உதவும் வகையில் எங்களுடன் நீங்கள் இணைய விரும்பினால் 9150734555, 9150737555 என்ற எண்களைத் தொடர்புகொள்ளுங்கள்.

கொரோனா பேரிடரில் உதவி தேவைப்படுவோருக்கு நீங்கள் அளிக்கும் உதவிகளை சரியாக சென்று சேர்வதற்கு உறுதியான அத்தனை பணிகளையும் களத்தில் இருந்து நம் குழுவினர் செய்து வருகிறார்கள்.

உதவி நாடுவோருக்கு தங்களால் இயன்றதை தொடர்ந்து செய்துவரும் நல் உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும். இந்த முன்னெடுப்பு குறித்து விரிவாக அறிய > எளியவர்களின் இருள் நீங்க... 'புதிய தலைமுறை' முன்னெடுப்பில் 'துளிர்க்கும் நம்பிக்கை'

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com