\
திமுக எம்.எல்.ஏவின் காலணியை கையில் எடுத்துச்சென்ற நிர்வாகி..! வீடியோ

திமுக எம்.எல்.ஏவின் காலணியை கையில் எடுத்துச்சென்ற நிர்வாகி..! வீடியோ

திமுக எம்.எல்.ஏவின் காலணியை கையில் எடுத்துச்சென்ற நிர்வாகி..! வீடியோ
Published on

தடுப்பணை மற்றும் கால்வாய் உடைப்பை பார்வையிடச் சென்ற திமுக எம்எல்ஏவின் காலணிகளை திமுக உறுப்பினர் ஒருவர் கையில் எடுத்துச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் ஆம்பூரை அடுத்த பொண்ணபல்லி பகுதியில் ஏரி உடைந்து அதிலிருந்து தண்ணீர் வெளியேறியதால் ஏரிக்கரையை ஒட்டி உள்ள தடுப்பணை உடைந்து சேதமடைந்தது. இதை பார்வையிட ஆம்பூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் மற்றும் வருவாய் துறையினர் அங்கு சென்றனர்.

அப்போது கால்வாயில் தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் அதை கடக்க முயன்றபோது எம்எல்ஏ வில்வநாதன் தனது காலணியை கழற்றி விட்டுச் சென்றார். அவருக்கு பின்னால் வந்த திமுக வெங்கடசமுத்திரம் ஊராட்சி செயலாளர் சங்கர் என்பவர் எம்எல்ஏவின் காலணிகளை கையிலெடுத்து கொண்டுச் சென்றார். 

எம்எல்ஏ கழட்டிவிட்ட காலணிகளை கையில் எடுத்துச்சென்ற கட்சி உறுப்பினரின் செயல் காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எம்எல்ஏ ஒருவரின் காலணியை கட்சி நிர்வாகி கையில் எடுத்துச்சென்ற இந்த விவகாரம் சர்ச்சையையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com