விலை உயர்ந்தாலும் சத்துணவுத் திட்டத்தில் முட்டை உண்டு : அமைச்சர் சரோஜா

விலை உயர்ந்தாலும் சத்துணவுத் திட்டத்தில் முட்டை உண்டு : அமைச்சர் சரோஜா

விலை உயர்ந்தாலும் சத்துணவுத் திட்டத்தில் முட்டை உண்டு : அமைச்சர் சரோஜா
Published on

முட்டை விலை எவ்வளவு உயர்ந்தாலும், சத்துணவுத்திட்டத்தில் தொடர்ந்து முட்டை விநியோகிக்கப்படும் என்று சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் முட்டையின் விலை அதிகப்படியாக உயர்ந்தது. இதன் எதிரொலியாக பள்ளி சத்துணவு மையங்களில் முட்டை விநியோகம் நிறுத்தப்படுவதாக தகவல்கள் பரவின. விலை ஏற்றத்தால் சத்துணவு திட்டத்திற்காக முட்டை கொள்முதல் செய்யப்படவில்லை எனவும் திமுக செயல்தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், முட்டை விலை எவ்வளவு உயர்ந்தாலும், சத்துணவுத்திட்டத்தில் தொடர்ந்து முட்டை விநியோகிக்கப்படும் என்றும், சத்துணவுத்திட்டத்தில் எந்த குளறுபடியும் நிகழவில்லை எனவும் சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். மேலும் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் சரோஜா விமர்சித்துள்ளார்.  

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com