அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு
சட்டப்பேரவைத் தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி வைத்துள்ள தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை எனக்கூறி அங்கிருந்து விலகியது. இதையடுத்து அமமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. அங்கு தேமுதிகவுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, “எழும்பூர், விருகம்பாக்கம், பல்லாவரம், சோழிங்கநல்லூர், செய்யூர்(தனி), கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆவடி, வில்லிவாக்கம், திருவிக நகர், பென்னாகரம், செங்கம், கலசப்பாக்கம், ஆரணி, மயிலம், திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, ஏற்காடு, மேட்டூர், சேலம் மேற்கு, நாமக்கல், குமாரப்பாளையம், பெருந்துறை, பவானிசாகர், கூடலூர்,அவினாசி, திருப்பூர் வடக்கு,வால்பாறை, ஒட்டன்சத்திரம், மதுராந்தகம், கேவி குப்பம், ஊத்தங்கரை, வேப்பன்ன ஹள்ளி, பாலக்கோடு, விருதாச்சலம், பன்ரூட்டி, கடலூர், கீழ்வேளூர்(தனி), பேராவூரணி, புதுக்கோட்டை, சோழவந்தான், மதுரை மேற்கு, அருப்புக்கோட்டை, பரமக்குடி, தூத்துக்குடி, ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், ராதாபுரம், குளச்சல், விளவங்கோடு, நிலக்கோட்டை(தனி), கிருஷ்ணராயபுரம்(தனி), கரூர், மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி, பெரம்பலூர்(தனி), திட்டக்குடி(தனி)” ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.