திமுக கூட்டணி: திருப்பூர் மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு
திருப்பூர் மாநகராட்சியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 5 வார்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சியில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே நகர்புற உள்ளாட்சி தேர்தலில் இடப்பகிர்வு இறுதியானது. மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 5 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 25 , 30 , 48 , 51 , 55 ஆகிய 5 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த 5 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி சார்பில் 25 வது வார்டில் பூபேஷ் , 30 வது வார்டில் முத்துலட்சுமி , 48 வது வார்டில் விஜயலட்சுமி , 51 வது வார்டில் செந்தில்குமார் , 55 வது வார்டில் தீபிகா ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியில் காங்கிரஸ் கட்சிக்கான இடங்கள் ஒதுக்கப்பட்ட நிலையில் , பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் இன்னும் இறுதியாகாத நிலை உள்ளது.