மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் அனைத்துக்கட்சி கூட்டம்!

மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் அனைத்துக்கட்சி கூட்டம்!
மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம்  அனைத்துக்கட்சி கூட்டம்!

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் காணொலி மூலம் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழக அரசின் கொரோனா பேரிடர் கால மோசடி மற்றும் நிர்வாக திறன் குறித்து அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், தி.க.தலைவர் வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மா.கம்யூ. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இ.கம்யூ.மாநில செயலாளர் முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, மனிதநேய மக்கள் கடசி தலைவர் ஜவஹருல்லா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் உட்பட 11 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கே.எஸ். அழகிரிக்கு பதிலாக தங்கபாலு பங்கேற்றுள்ளார்.

கொரோனாவினால் மரணம் அடைந்த 444 பேர் கணக்கு விடுப்பட்டது குறித்தும், ரேஷன் கார்டுகளுக்கு முக கவசம் வாங்கியதில் ஊழல் நடைபெற்று இருப்பதாக சமீபத்தில் திமுக தலைவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில்  இந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் அது தொடர்பாகவும்  ஆலோசிக்கப்படலாம் என தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com