அனிதா தற்கொலை, நீட் விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு

அனிதா தற்கொலை, நீட் விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு

அனிதா தற்கொலை, நீட் விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக அழைப்பு
Published on

மாணவி அனிதாவின் தற்கொலையைத் தொடர்ந்து, நீட் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க, நாளை அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை 5:00 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், மதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீக் லீக் உள்ளிட்ட கட்சியினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், அழைப்பு விடுத்திருக்கிறார்.

அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகளுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை. நீட் தேர்வை எதிர்த்து வழக்குத்தொடர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதைத் தொடர்ந்து, நீட் தேர்வை ரத்து செய்ய அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது குறித்து நாளைய கூட்டத்தில், எதிர்க்கட்சியினர் ஆலோசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com