அதிமுக அமைதியாக இருந்தால் அண்ணாவிற்கு அவமானம் -புதிய கல்வி கொள்கை குறித்து பேசிய ஸ்டாலின்

அதிமுக அமைதியாக இருந்தால் அண்ணாவிற்கு அவமானம் -புதிய கல்வி கொள்கை குறித்து பேசிய ஸ்டாலின்
அதிமுக அமைதியாக இருந்தால் அண்ணாவிற்கு அவமானம் -புதிய கல்வி கொள்கை குறித்து பேசிய ஸ்டாலின்

கல்வியில் சிறந்த தமிழகத்தில் புதிய கல்வி கொள்கை என்ற மதயானை புகுந்து நாசம் செய்வதாக என்று திமுக தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

புதிய கல்வி கொள்கை 2020 பற்றிய கருத்து மேடை நிகழ்ச்சி காணொலி மூலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையுரையாற்றினார்.

அப்போது, புதிய கல்விக்கொள்கையில் மதிய உணவுத்திட்டத்தைக் கைவிடுகிறார்கள் என்றும் கலைக்கல்விக்கான நுழைவுத்தேர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என வரைவு அறிக்கை வந்தபோதே. திமுக சார்பில் மத்திய அமைச்சரிடம் கடிதம் அளிக்கப்பட்டது என்றும் கூறினார்.

மேலும் பிரதமர் மோடி பேச்சுக் குறித்து கருத்து தெரிவித்த ஸ்டாலின் “ கல்விக்கொள்கை குறித்து உண்மைக்கு புறம்பான கருத்துகளை மோடி கூறியுள்ளார் என்றும் அவர் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்,  ஆனால் இதன் மூலம்  உயர்கல்விக்கு மாணவர்கள் செல்வது தடுக்கப்படும் என நான் கூறுகிறேன். புதிய வெளிச்சம் பாய்ச்சும் என பிரதமர் கூறுகிறார், இருந்த வெளிச்சத்தை இருட்டாக்கியுள்ளீர்கள் என நாங்கள் கூறுகிறோம். இன்னும் 10 ஆண்டுகளில் கல்வி சிலருக்கு மட்டுமே சொந்தம் என ஆகிவிடும். ஆகையால் அனைத்துக்கட்சிகளும் கல்விக்கொள்கையை எதிர்க்க வேண்டும். அதிமுக மெளனமாக இருந்தால் அண்ணாவிற்கு அவமானம். புதிய கல்விக்கொள்கையை இறுதி வரை எதிர்ப்போம்”  என்று அவர் பேசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com