ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு

ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு
ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு

அகில இந்திய ரஜினிகாந்த் மக்கள் மன்றத்தின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேலூரில் கடந்த 19ஆம் தேதி ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்டத்தின் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். இந்நிலையில் ரஜினி மக்கள் மன்றம், வேலூர் மாவட்டத்தின் நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

அத்துடன் ரஜினிகாந்தின் ஒப்புதலுடன் மாவட்ட மன்ற நிர்வாகிகள், மாநகாரட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் ஜனநாயக முறைப்படி நடத்தப்பட்டு பொறுப்புகள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் 21ஆம் தேதி அரசியல் பயணத்தை தொடங்கவுள்ள நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் நிர்வாகிகள் நியமனங்கள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com