”ஈவிஎம் எந்திரங்களை மாற்றுகிறார்கள்” அகிலேஷின் புகாரும் தேர்தல் ஆணையத்தின் விளக்கமும்

”ஈவிஎம் எந்திரங்களை மாற்றுகிறார்கள்” அகிலேஷின் புகாரும் தேர்தல் ஆணையத்தின் விளக்கமும்
”ஈவிஎம் எந்திரங்களை மாற்றுகிறார்கள்” அகிலேஷின் புகாரும் தேர்தல் ஆணையத்தின் விளக்கமும்

உத்தரப்பிரதேசத்தில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளநிலையில், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்றுவதாக சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையத்தின் விளக்கம் என்ன? விரிவாக பார்க்கலாம்

வாக்கு எண்ணிக்கையை நேரடி ஒளிபரப்பு செய்யக் கோரிக்கை உத்தரப்பிரதேசத்தில் ஏழு கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளன. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாகவும், உள்ளூர் வேட்பாளர்களுக்கு தெரிவிக்காமல் வாக்குப்பதிவு இயந்திரங்களை அதிகாரிகள் வெளியே கொண்டு சென்றதாக சமாஜ்வாதி கட்சித்தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.



மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வெளியே கொண்டுசெல்லப்பட்ட விவகாரத்தை கண்டித்து அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில், வெளியே எடுத்துச்செல்லப்பட்ட இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணும் பயிற்சிக்கு வழக்கமாக பயன்படுத்தப்படுபவை எனவும் தவறான தகவலின் பேரில் அரசியல் கட்சியினர் வாகனத்தை முற்றுகையிட்டதாக தேர்தல் அதிகாரிகள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையருக்கு இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைமை , அனைத்து தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் பணிகளை இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இதனால் உத்தரப்பிரதேச தேர்தல் களம், முடிவுகளுக்கு முன்னரே பரபரப்பாக காட்சியளிக்கிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com