\
நாடாளுமன்றத் தேர்தலில் உற்சாகத்துடன் வாக்களித்த பாலிவுட் பிரபலங்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் உற்சாகத்துடன் வாக்களித்த பாலிவுட் பிரபலங்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் உற்சாகத்துடன் வாக்களித்த பாலிவுட் பிரபலங்கள்
Published on

பாலிவுட் நட்சத்திரங்களான அஜய் தேவகன், அமீர் கான், மாதுரி தீக்ஷித், பிரியங்கா சோப்ரா மற்றும் கஜோல் உள்ளிடவர்கள் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். 

நாடாளுமன்றத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. அதன்படி 9 மாநிலங்களிலுள்ள 72 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களில் காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அத்துடன் பாலிவுட் நட்சத்திரங்களும் இன்று நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 

அந்த வகையில் பாலிவுட் நட்சத்திரங்களான பிரியங்கா சோப்ரா, கஜோல், அஜய் தேவகன், அமீர் கான், கரீனா கபூர், மாதூரி தீக்ஷித், கங்கனா ரனாவத், சோனாலி பிந்த்ரே ஆகியோர் வாக்களித்தனர். அதேபோல அரசியல் தலைவர்களான ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே, மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் சரத் பவார், மத்தியப் பிரதேச முதலமைச்சர் கமல்நாத் ஆகியோர் வாக்களித்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com